விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா இ. கா.ப அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 31.10.2022-ம் தேதி ’தேசிய ஒற்றுமை நாள்” உறுதிமொழியை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அலுவலக பணியாளர்கள் மற்றும் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறையினர் எடுத்துக் கொண்டார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 31ம் தேதி தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு இன்று 31.10.2022 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஶ்ரீநாதா இ. கா. ப., அவர்கள் தலைமையில் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாளும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்.” என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
விழுப்புரம் மாவட்ட காவல்துறை.