கோவை: கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள 2022 உள்ளாட்சி தேர்தலில் பொது மக்கள் ஜனநாயக முறைப்படி எந்தவித அச்சுறுத்தலும் இன்றி பாதுகாப்பாக வாக்களிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் தலைமையில் இன்று (16.02.2022) வடவள்ளி காவல் நிலைய பகுதியில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இக்கொடி அணிவகுப்பில் பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள் – 06, உதவி ஆய்வாளர்கள்-05, சிறப்பு உதவி ஆய்வாளர்கள்-04, ஆயுதப்படை காவல்துறையினர், சிறப்பு அதிரடி காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் என சுமார் 85 காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்