தூத்துக்குடி: வருகின்ற 19.02.2022 அன்று நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு இன்று (10.02.2022) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்துபாலம் ஆனந்த விநாயகர் கோவில் பகுதியில் தொடங்கி காமராஜர் நகர், மதுரை ரோடு, சன்னதி தெரு, கீழரத வீதி, மார்க்கெட் ரோடு, வேம்பார் ரோடு வழியாக விளாத்திகுளம் காவல் நிலையம் வந்து நிறைவடைந்தது.
இந்த கொடி அணிவகுப்பில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ், விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.இளவரசு, விளாத்திகுளம் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ஆனந்த தாண்டவம், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.விஜயலெட்சுமி, மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.அனிதா, உதவி ஆய்வாளர்கள்திரு. கங்கைநாதபாண்டியன், திரு.செந்தில்வேல்முருகன், திரு.ஆறுமுகம், திரு.சரவணன் மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் உள்ளூர் போலீசார் உட்பட 150 பேர் கலந்து கொண்டனர்.