திருவாரூர்: குடவாசல் காவல் சரக பகுதிகளில் பல்வேறு நபர்களை ஏமாற்றி கார்திருட்டு, இடம்,சொத்துக்களை அபகரித்தல், அச்சுறுத்தல் செய்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த R.S.பாபு (எ) சீட்டிங் பாபு 45/21, என்ற போக்கிரி பதிவேடு ரவுடியை (History sheet Rowdy) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் தனிப்படை அமைத்து கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரை மற்றும் அதிரடி நடவடிக்கையின்பேரில் குற்றவாளி R.S.பாபு (எ) சீட்டிங் பாபு
இன்று (06.01.22) குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்படி குற்றவாளியை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிறப்பாக பணிபுரிந்த நன்னிலம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோவன் குடவாசல் காவல் ஆய்வாளர் திரு.கருணாநிதி மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
மேலும் இதுபோன்று திருவாரூர் மாவட்டத்தில் யாரேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீதும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா