திருவாரூர்: திருத்துறைப்பூண்டி காவல் சரகம் விளக்குடி பகுதியைச்சேர்ந்த விக்னேஷ் கண்ணன் 21 என்பவர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நிலையில் அவரை கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்களின் பரிந்துரை மற்றும் அதிரடி நடவடிக்கையின்பேரில் மேற்படி குற்றவாளி விக்னேஷ் கண்ணன்
நேற்று (24.12.21) குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேற்படி குற்றவாளியின் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து சிறப்பாக பணிபுரிந்த திருத்துறைப்பூண்டி மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர்
செல்வி.ஷர்மிளா மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
மேலும் இதுபோன்று திருவாரூர் மாவட்டத்தில் யாரேனும் பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீதும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா