அரியலூர் : அரியலூரில் 04.10.2020 அன்று தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், பொதுமக்களுக்கு சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக, காவல்துறையினர் கலந்துகொண்ட இருசக்கர வாகன பேரணி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வு பேரணியில் சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி.த.ரத்னா.இ.ஆ.ப. அவர்கள் கலந்துகொண்டு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இதில் தலைக்கவசம் அணிவதன் பயன்கள் குறித்தும், சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இப்பேரணியானது கல்லங்குறிச்சி ரவுண்டானாவில் தொடங்கி செந்துறை ரவுண்டானா, மாவட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் அரியலூரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று அண்ணாசாலையில் நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு.சுந்தரராஜன் அவர்கள், அரியலூர் வட்டாட்சியர் திரு.சந்திரன் அவர்கள், அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மதன் அவர்கள், அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.