தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் : 24.10.2021முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் வைத்து இன்று (24.10.2021) சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. சந்தீஸ் இ.கா.ப அவர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும்போது அனவரதநல்லூர் கிராமம் பல்வேறு சமுதாய மக்கள் அமைதியாக வாழும் எந்த பிரச்சனை இல்லாத நல்ல கிராமம், ஒரு சிலர் செய்யக்கூடிய சிறு தவறுகளால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே அதுபோன்று எவ்வித பிரச்சனையும் இல்லாமல் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருப்பதற்காகத்தான் இந்த சமுதாய விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த கிராமத்தில் பல்வேறு சமுதாய மக்கள் வாழ்ந்து வந்தாலும் ஜாதி, மத பேதமின்றி எவ்வித பிரச்சனையில்லாமல் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும்,
இளைஞர்கள் மது போன்ற தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகமால் இருக்க வேண்டும், ஏனென்றால் இதன் மூலமும் அதிக சமுதாய பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.
மேலும் இதுபோன்ற பிரச்சனைகள் சம்மந்தமாக ஒரு இளைஞர் மேல் வழக்குபதிவு செய்ய நேர்ந்தால் அவரின் நற்பெயர் பாதிக்கப்படுவதோடு, அவருக்கு அரசு வேலை மற்றும் தனியார்துறையிலும் வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதுடன் அவரின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்,
எனவே இளைஞர்கள் இதுபோன்ற பிரச்சனைகளில் ஈடுபடாமல் கல்வியை நன்றாக கற்று எதிர்காலத்தில் சிறந்தவர்களாக திகழ வேண்டும், உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் நாங்கள் உடனடியாக உங்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்,
மேலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாஸ்கரன், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி. பவித்ரா, முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. இன்னோஸ்குமார் உட்பட
காவல்துறையினர் மற்றும் வசவப்பபுரம் பஞ்சாயத்து தலைவர் திரு. சுடலைக்கண்ணு, கவுன்சிலர் திருமதி. பேச்சியம்மாள் உட்பட பொதுமக்கள் உடனிருந்தனர்.