பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் தலைமையில் இன்று 08.10.2021-ம்தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் விசாரணை முடிப்பது குறித்தும், சட்ட ஒழுங்கு பாதுகாப்பை மேலும் எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர் உள்பட 15 காவல்துறையினருக்கு அவர்களின் பணியினைப் பாராட்டி பாராட்டுச் சான்றிதழையும் வெகுமதியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ச.மணி அவர்கள் வழங்கினார்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள், வருவாய்த் துறையினர், மருத்துவத் துறையினர், போக்குவரத்து துறையினர், சமூகநல அலுவலர்கள்
என பலர் கலந்து கொண்டனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக பெரம்பலூர் மாவட்ட காவல்துறை