தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் I.P.S அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள்,போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில் விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 115 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 3982 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது..
சிறப்பாக ரோந்து பணியில் ஈடுபட்டு கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்பவர்களை கைது செய்த காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்..