காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் உட்கோட்டம், திருப்பெரும்பதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பெரும்புதூர் அரசு பொது மருத்துவமனைக்கு அடிதடி, விபத்து வழக்குகளில் காயம்பட்டவர்கள் சிகிச்சைக்கு வரும்போது.
குற்ற சம்பவம் குறித்த விவரங்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தங்கு தடையின்றி உடனடியாக தகவல்கள் கிடைக்க ஏதுவாகவும் மற்றும் திருப்பெரும்புதூர் அதனை சுற்றியுள்ள கிராமத்திலிருந்தும்,
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சென்னை புறநகர் பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை வருவதால் பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பிற்காகவும் இன்று (12.08.2021) திருப்பெரும்புதூர் அரசு பொது மருத்துவமனையின் வளாகத்தில் திருப்பெரும்புதூர் புற காவல் நிலையத்தினை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர் திரு.காமேஷ்பாலாஜி, திருப்பெரும்புதூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணிகண்டன் மற்றும் காவல் ஆய்வாளர், திருப்பெரும்புதூர் ஆகியோர் உடனிருந்தனர். மேலும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திருப்பெரும்புதூா புற காவல் நிலையத்தில் சுழற்சி முறையில் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு 24 மணிநேரமும் செயல்படும் என தெரிவித்தார்.