கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில், இன்று 5.2.25 தேதி கடலூர் SRJ காவலர் நல திருமண மண்டபத்தில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். துணை காவல் கண்காணிப்பாளர்கள் பெட்டிஷன் மேளாவில் பங்கேற்றனர்.