கடலூர்: கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கலைக்கல்லூரியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில், போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி மேற்கொண்டனர். தொடர்ந்து போதைப் பொருட்களுக்கு எதிராக பதாகைகள் ஏந்தி மனித சங்கிலி ஊர்வலம் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் Dr. திருமதி. சபீனா பானு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நல்லதுரை, துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி. சௌமியா, சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா, கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.