மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு G. ஸ்டாலின் அவர்கள் நாமக்கல் மாவட்டம் குற்ற பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய போது திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் SC/ST வன்கொடுமை சட்டம் 1989 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் புலன் விசாரணையை மேற்கொண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 நபர்களை வரிசைப்படுத்தி குற்ற பத்திரிகை தாக்கல் செய்து குற்றம் சாட்டப்பட்ட முதல் குற்றவாளிக்கு மூன்று ஆயுள் தண்டனையும் (சாகும் வரை) மற்ற 9 குற்றவாளிகளுக்கு இரண்டு மற்றும் ஒரு ஆயுள் தண்டனையும் (சாகும் வரை) மதுரை நீதிமன்றம் தீர்ப்பு வழங்க காரணமாக இருந்த அவரின் மிகச் சிறப்பான புலன் விசாரணைக்காக 2022 ஆம் ஆண்டிற்கான தமிழக முதலமைச்சரின் சீர்மிகு புலனாய்விற்கான பதக்கத்தை இன்று சென்னையில் நடைபெற்ற காவல் பதக்கங்கள் வழங்கும் விழாவில்தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் திரு.சங்கர் ஜிவால் அவர்கள் வழங்கினார்.