இராணிப்பேட்டை: அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் முக்கிய வழக்கு கோப்புகளையும், பதிவேடுகளையும், ஆவணங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் காவல் நிலைய போலீசாருக்கு அவர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.வெங்கடேசன், காவல் ஆய்வாளர் திரு. தங்ககுருநாதன் (அரக்கோணம் நகர காவல் நிலையம்), காவல் ஆய்வாளர் திரு.பழனிவேல் (அரக்கோணம் தாலுகா காவல் நிலையம்) மற்றும் உதவி ஆய்வாளர் திரு.நாராயணசாமி (அரக்கோணம் தாலுகா காவல் நிலையம்) ஆகியோர் உடன் இருந்தனர்.