பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநங்கைகளின் கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் திருநங்கைகளின் அத்தியாவசிய தேவைகள் என்ன என்பதை பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டறிந்தார். மேலும் அவர்கள் தங்களுக்கு வசிக்க குடியிருப்பு வேண்டும் என்றும் தங்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்கிறோம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உறுதி அளித்தார்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ஆரோக்கிய பிரகாசம் மற்றும் திரு.நீதிராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை