திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கோர்ட் வாசலில் வெடிகுண்டு வீசி மகாராஜா என்கிற சாதி தலைவரை போலீஸ் உதவியுடன் கொல்ல முயற்சி ! என்று சமூக வலைதளத்தில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறான செய்தியாகும். அவ்வாறான எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இதுபோன்று தவறான செய்தியை பரப்புவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.