திருவாரூர்: 2024 – பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தாநல்லூர் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் தலைமையில் இன்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
பொதுமக்கள் அச்சமின்றி தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற (வாக்களிக்க) வேண்டும் என்பதற்காக பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.கொடி அணிவகுப்பில் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுத்து சென்றனர்.அப்போது, திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.P.மணிகண்டன் அவர்கள் உடனிருந்தார்கள்.