தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குத்தபாஞ்சான், தாழையூத்து மற்றும் ராம்நகர் பகுதிகளில் பேட்டரிகள், மின் வயர்கள், நீர்மூழ்கி மோட்டார்கள் மற்றும் ஆடுகள் என தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. T.P. சுரேஷ்குமார் B.E., M.B.A., அவர்கள் உத்தரவின் பேரில், கடையம் காவல்துறையினர் மற்றும் ஆலங்குளம் உட்கோட்ட தனிப்படையினர் ஆகியோர்களின் தீவிர விசாரணையில், மேற்படி குற்ற செயல்களை தொடர்ந்து செய்து வந்த சுடலைஒளிவு @சுடலை 36. பரமசிவன்36. முருகன் 44. இசக்கிராஜ் 34.மாடக்கண் செல்வம் 28. ஆகிய ஐந்து நபர்களை கைது செய்து தென்காசி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.