திருவாருர்: திருவாருர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 127-கோவில்கள் இருந்துவரும் நிலையில் அதில் காலியாக உள்ள 75-காலிப் பணியிடங்களை நிரப்ப மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் கமிட்டி அமைத்து உடனடி நடவடிக்கை
மேற்கொண்டு ரஓய்வுபெற்ற காவல் அலுவலர்கள் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களை அழைத்து கமிட்டி மூலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காலை 11.00 மணிமுதல் 14.00 மணிவரை நேர்முகத்தேர்வு நடத்தினார்கள். இதில் தகுதியுடைய 05-ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், 03-ஓய்வுபெற்ற காவல் அலுவலர்கள்
(மொத்தம்:08) தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட 08-நபர்களுக்கும் உடனடியாக நன்னடத்தை விசாரணை செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக பணி நியமன ஆணை வழங்கி அனைவரையும் பணிக்கு அனுப்பிவைத்தார்கள். இத்தேர்வின்போது
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு.J.அன்பழகன் அவர்களும் முன்னால் இராணுவ வீரர்கள் நல உதவி-இயக்குனர்
திரு.ராஜன் அவர்களும் உடனிருந்தனர். மேலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விருப்பமுள்ள, தகுதியுடைய ஆளினர்கள் தொடர்புகொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.