இராணிப்பேட்டை: (16.08.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் இரத்தினகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரத்தினகிரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி தேரோட்ட திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு பணியினை ஆய்வு செய்து பணியில் இருந்த காவலருக்கு அறிவுரை வழங்கினார். பின்பு சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீக்கராஜபுரம் சோதனை சாவடியை திடீர் ஆய்வு செய்து அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தும், பணியில் இருந்த காவலருக்கு தக்க அறிவுரைகளையும் வழங்கினார்.