இராமநாதபுரம் : ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று காலை இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பளர் அவர்களிடம் நேரில் வந்து மனு அளிக்கலாம் என்றும், அவ்வாறு அளிக்கப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு 15 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவ்வாறு 15 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கவில்லை என்றாலோ அல்லது காவல்துறையினரின் நடவடிக்கையில் திருப்தியில்லை என்றாலோ மீண்டும் புதன் கிழமை நேரில் வந்து புகார் மனு அளிக்கலாம் என இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை,M.A., அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இது தவிர, அனைத்து நாட்களிலும் தினமும் காலை முதல் மதியம் வரை வழக்கம்போல மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும். மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் சட்ட விரோதச் செயல்கள் நடைபெறுவதாக தெரியவந்தால் அது குறித்து 8300031100 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி