விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் (13.10.2022), விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவர் திரு. பாண்டியன் IPS., அவர்களின் தலைமையில் போதைப் பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நமது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்கள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.தேவராஜ், திரு.கோவிந்தராஜ், அவர்கள் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.