தேனி: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்.இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதி மொழி எடுக்கப்பட்டது.
தேசிய வாக்காளர் தினமான இன்று (25.01.2022) தேர்தலின்போது வாக்காளர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நிலைய பொறுப்பதிகாரிகள் தலைமையில் கீழ்கண்ட உறுதி மொழி எடுக்கப்படுகிறது.
மக்களாட்சி மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்று உறுதிமொழிகிறோம்” என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது.