இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் (01.10.2025) அன்று காவேரிப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பட்டு ஜங்ஷன், வாலாஜா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாலாஜா பேருந்து நிலையம், இராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துக்களை ஜங்ஷன் ஆகிய இடங்களில் காவல்துறையினரின் வாகனத் தணிக்கையை திடீர் ஆய்வு செய்து வாகன ஓட்டிகளில் பாதுகாப்பாகவும், கவனமாகவும் நிறுத்தி வாகன தணிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கி பராமரிக்கப்படும் ஆவணங்களில் கையொப்பமிட்டார்.