சிவகங்கை: சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் 6 வது விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் நமது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் திரு T. செந்தில் குமார் அவர்கள் சிறப்பித்து மாணவர்களுக்கு ஆரோக்கியமான பொழுதுபோக்குகளை பின்பற்றுவதை பற்றியும் மற்றும் சிறப்பான பல அறிவுரைகளையும் வழங்கினார்.
மேலும் விளையாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இவ்விழாவிற்கு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு. திரு. C. ரேவதி பாலன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
துணை முதல்வர் மரு. திருமதி ஷர்மிலா திலகவதி அவர்கள், மருத்துவ கண்காணிப்பாளர் மரு. திரு பால முருகன் அவர்கள், நிலைய மருத்துவ அதிகாரி மரு. திரு.முஹம்மது ரஃபி மற்றும் உதவி நிலைய மருத்துவர்கள் மரு.திரு.மிதுன் குமார், மரு. திருமதி.வித்யா ஶ்ரீ, மரு.திரு.செந்தில் குமார், விளையாட்டு துறை செயலாளர் மரு. திரு.மதியழகன் மற்றும் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்