அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.மணவாளன் அவர்கள் முன்னிலையில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சமுதாய நல மருத்துவமனை சார்பாக மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டது. மருத்துவ முகாமில் டாக்டர் செல்வி.பொன்னி அவர்கள் மற்றும் அவரது மருத்துவ குழுவினர் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினருக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடலின் வெப்பநிலை பரிசோதித்தனர்.
மேலும் கொரோனா அறிகுறிகளை பற்றியும் விளக்கினார். இந்த முகாமில் காவல்துறையினரின் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர். உடன் ஆயுதப் படை உதவி ஆய்வாளர்கள் திரு.மகேஷ் ,திரு.ராஜா அவர்கள் இருந்தனர்.