காஞ்சி: தமிழக அரசு கொரோனா பெருந்தொற்றை தடுக்கும்பொருட்டு தமிழகம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார விழாவினை (01.08.2021 முதல் 07.08.2021) வரை மேற்கொள்ளப்படவிருக்கிறது.
இதன்பொருட்டு இன்று (02.08.2021) காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி டாக்டர்.ஆர்த்தி, இ.ஆ.ப., மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. டாக்டர் சுதாகர் ஆகியோர் கொரோனா சம்மந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து பேருந்து நிலையத்தில் முக கவசம் அணியாத முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு முக கவசம் வழங்கியும். கொரோனா சம்மந்தமாக விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கினார்கள்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட காவலர்கள் கொரோனா தலைகவசம் அணிந்து பேருந்தில் பயணம் செய்த பொதுமக்களிடம் சமூக இடைவெளி குறித்தும், முக கவசம் அணிவதன் அத்தியாவசியம் குறித்து விழிப்புணர்வு செய்தனர்.
மேலும் பேருந்து நிலையத்தில் முக கவசியம் அணியாமல் வந்த இளைஞர்களுக்கு அபராதம் விதித்ததுடன் அறிவுரை வழங்கினார்கள்.