மதுரை : மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், விக்கிரமங்கலம் பகுதியில் கள்ளச் சந்தையில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளில் மது விற்பனை நடைபெற்று வருவதாக, இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சில கடைகளில் காலை 5 மணி முதல் சில்லறை விற்பனையில் மதுபானங்கள் அரசால் விற்கப்படும் பீர் பாட்டில்கள் ஆகியன கள்ளச் சந்தையில் கிடைக்கின்றன. இதனால், குடிமகன்கள் நிறைய பேர் அதிகப்படியான விலை கொடுத்து வாங்கி மதுவை அருந்தி வருகின்றனர். கள்ளச் சந்தையில், மது விற்பனை செய்யும் நபர்கள் குடிசைத்தொழில் போல் அதனை செய்து வருகின்றனர். மேலும், டாஸ்மாக் கடைகளில் கிடைக்காத சரக்குகள் கூட அந்த பெட்டி கடைகளில் கிடைப்பதாக குடிமகன்கள் தெரிவிக்கின்றனர். எங்கு மதுபானங்கள் கொள்முதல் நடக்கிறது, யார் யார் மதுவை கள்ளச் சந்தையில் விற்பனை செய்கிறார்கள்.
அதிகாரிகளுக்கு தெரிந்தும் கண்டும் காணாதது போல் உள்ளது வருந்தத்தக்கது. மேலும், கள்ளச் சந்தையில் மது விற்பதால் அரசுக்கு வருவாய் இழப்பை மறைமுகமாக ஏற்படுத்தி வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து மாவட்ட மதுவிலக்கு பிரிவு, மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி ஆய்வு செய்து, மது பாட்டில்கள் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்ய வேண்டும் என்று புகார் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மது போதையில் வாலிபர்கள் தாக்கிக் கொண்டது. குறிப்பிடத்தக்கது. அதைப்போல, கிராமங்களில் பல்வேறு பிரச்சனைக்கு இந்த கள்ளச் சந்தை மது விற்பனை மூல காரணமாக உள்ளது. எனவே ,இதனை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். என்று பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி