கன்னியாகுமரி: கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில் சீசன் காலத்தில், அனுமதி இல்லதா மினி பேருந்துகள் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களை சவாரிக்கு ஏற்றி செல்வதால்,தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் தனியார் மினி பேருந்துகளை அனுமதி இல்லாத இடத்தில் இயக்க தடை விதிக்க வேண்டும் என கேட்டு, கன்னியாகுமரி நகர ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்தனர். 300-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிடக்கூடும் என்ற அச்சத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.















