காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை ( 09.10.2021 ) இரண்டாம்கட்ட உள்ளாட்சி தேர்தலானது மொத்தம் 05 மாவட்ட கவுன்சிலர், 29 ஒன்றிய வார்டு உறுப்பினர், 87 கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் 611 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கு 182 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் 393 வாக்குச்சாவடிகளில் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலானது அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு காவல்துறை சார்பில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 4 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 14 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 1911 காவலர்கள் மற்றும் ஊர்காவல்படையினர் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து அழைக்கப்பட்டு பல்வேறு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.M.சுதாகர் அவர்கள் உள்ளாட்சி தேர்தலானது அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் வாக்குச்சாவடிகளில் களாய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்