சேலம்: சேலம் ஏ வி ஆர் ரவுண்டானா அருகே மாற்றுத்திறனாளி ஒருவர் தனது மனைவியுடன் சமூக ஆர்வலர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு விட்டு அங்கேயே காலம் கழித்து வருகிறார்.
இந்தநிலையில் ஏவிய ரவுண்டானா அருகே குடிபோதையில் இருந்த வாலிபர்கள் இருவர் மாற்றுத்திறனாளியை ஏதோ வம்புக்கு இழுத்தனர் அப்போது மாற்றுத் திறனாளி இருவரும் முக கவசம் அணிந்து பேசுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குடிப்போதை வாலிபர்கள் மாற்றுத்திறனாளியை அடித்து உதைத்துள்ளனர். இதனைப் பார்த்த சாலையில் சென்றவர்கள் வாலிபரின் நடவடிக்கையை தட்டிக் கேட்டனர் மேலும் உடனடியாக சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதன் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இரண்டு வாலிபர்களையும் பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர் குடிபோதையில் இருவரும் இந்த செயலில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது முகக் கவசம் அணியுங்கள் என்று நல்ல அறிவுரை சொன்ன மாற்றுத்திறனாளிக்கு அடி உதை பரிசாகக் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.