தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தம்பதியினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் நேரடியாக தரைதளத்திற்கு கீழே இறங்கி வந்து மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு. தூத்துக்குடி மாவட்டம், பேரூரணி ஊனமுற்றோர் காலனியைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஜெகநாதன் மற்றும் மாற்றுத்திறனாளியான அவரது மனைவி மாரியம்மாள் ஆகியோர் (08.11.2022), தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து மனு அளிக்க வந்தனர். மேற்படி மாற்றுத்திறனாளி தம்பதியினர் வந்ததையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் நேரடியாக தரைதளத்திற்கு கீழே இறங்கி வந்து அவர்களிடம் மனுவை பெற்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.