திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சிதம்பராபுரத்திலுள்ள மாற்று திறனாளி ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்ததால் களக்காடு காவல் நிலைய ஆய்வாளர் திரு.காளியப்பன் அவர்கள் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை செய்ததில் அவரது குடும்பத்தினர் ஏழ்மையில் வாடுவதாகவும் மகளின் படிப்பிற்கு கூட வருமானம் இல்லை எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து காவல்துறை சார்பில் ரூ.15000 SBI வங்கி கணக்கில் அவரது மகளின் படிப்பு செலவிற்காக போடப்பட்டு அவரது வீட்டிற்கு காவல் ஆய்வாளர் அவர்கள் நேரில் சென்று வங்கி காசோலையை ஒப்படைத்தார். களக்காடு காவல்துறையினரின் இத்தகைய மனிதநேயமிக்க செயலை மாவட்ட காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்.
தென்காசியிலிருந்து நமது குடியுரிமை நிருபர் ஜோசப் அருண் குமார்