திருவாரூர்: திருவாரூர் காவல் நிலையங்களுக்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு நடவடிக்கைகோரி தினசரி வரும் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக காவல் நிலைய வாசலில் சாய்தளம் இல்லாமல் இருந்த 10-காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்பேரில் இன்று (30.06.21) ஒரேநாளில் சாய்தளம் (RAMP) அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
பொதுமக்கள் நலன் கருதி விரைந்து செயல்பட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அந்தோணி ராஜா














