இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து வருகிற (06.04.2023) அன்று காலை 10.00 மணியளவில் கோட்டாட்சியர் தலைமையில் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் (19.05.2023) அன்று கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் உதவி ஆட்சியர், பரமக்குடி தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. ஒற்றைச்சாளர முறையில் நடைபெறும் இம்முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து
கொள்ளவிருப்பதால், இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிராத நபர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு (ருனுஐனு அட்டை) விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு மேற்கொள்ளவும், ஆதார்அட்டைக்கு விண்ணப்பிக்கவும், மற்றும் இதர அனைத்து விதமான உதவிகளுக்கான தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள், செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி