சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை 3,790 மாற்றுத்திறனாளிகள் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு, மாதம் 2 ஆயிரம் ரூபாய் பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகளின் ஆதார் விவரங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார், வங்கிக்கணக்கு, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளி புகைப்படம், மாற்றுத்திறனாளியின் பாதுகாவலர் புகைப்படம் ஆவணங்களில் அசல் மற்றும் நகலை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், வரும் (27-12-2022)-க்குள் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, மாற்றுத்திறனாளியின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம், மேற்காணும் விவரங்களை மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.
? சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி