திருவாரூர்: கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் வெளியில் செல்ல முடியாமல் பரிதவித்தும், வாழ்வாதாரம் இழந்தும் வாடிவரும் மாற்றுத்திறனாளிகள் 50 பேரை கோட்டூர் காவல் சரகம் கோட்டூர் பகுதிக்கு சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் சந்தித்து அவர்களுக்கு உணவுபொருட்கள், காய்கறிகள் மற்றும் பிஸ்கட்,ரொட்டிகள் ஆகியவை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடி உற்சாகப்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.மாரிமுத்து அவர்கள் கலந்துகொண்டார்கள்.














