திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன ஈக்காடு பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி யோகனந்தன் அவர்களிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் நூதன முறையில் பணம் ஏமாற்றப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவின்படி, தனிப்படை காவல் அதிகாரிகள் தீவிர விசாரணையின்போது 10 நாட்களில் அவர் இழந்த பணம் ரூ. 30,000 /- மீட்டு அவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார். உடன் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. முத்துக்குமார் அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்