தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம், மற்றும் மணியாச்சி ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பொதுமக்களிடம் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அதன்படி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. கமலா தேவி மற்றும் போலீசார் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி பகுதியில் உள்ள சொர்ணா செவிலியர் நிறுவன மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடமும் , விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. பஞ்சவர்ணம் மற்றும் போலீசார் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெச்சிலாபுரம் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளிடமும், ராமச்சந்திரபுரம் பகுதியில் பெண்களிடமும், மணியாச்சி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சுகந்திரதேவி தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. வீரபாண்டியன் மற்றும் போலீசார் மணியாச்சி பகுதியில் உள்ள செக்கினா தொடக்க பள்ளியில் மாணவ மாணவிகள் உட்பட ஆசிரியர்களிடமும் “மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுவரை 3899 “மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 1,23,795 பொதுமக்களிடம் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு 36 வகையான கருத்துக்களை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.