தூத்துக்குடி : தூத்துக்குடி மேட்டுபட்டி கடற்கரைப் பகுதியில் வடபாக உதவி ஆய்வாளர் மாறு வேடத்தில் சென்று 250 கிலோ கடல் அட்டை கடத்தலை தடுத்துள்ளார்.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் கடல் அட்டை கடத்தல் அவ்வப் போது மறைமுகமாக நடந்து வருவதாக பொதுமக்களின் சார்பாக தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வடபாகம் காவல் உதவி ஆய்வாளர் திரு.சுந்தரம் மாறுவேடத்தில் கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டார்.
அப்போது ஒரு மினி வேனில் கடல் அட்டை கடத்தப்படுவதைக் கண்டு, அவர்களை மடக்கிப் பிடிக்கச் சென்றார். ஆனால், அதில் இருந்த 4 பேர் கடல் வழியாக தப்பி ஓடினர்.
இந்நிலையில், 250 கிலோ கடல் அட்டை மற்றும் ஆம்னி வேன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றார். தொடர்ந்து கடல் வழியாக தப்பிச் சென்ற நான்கு பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
G. மதன் டேனியல்
தூத்துக்குடி