மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை நடைபெறும் மேல அனுப்பானடி Uகுதியில் வாக்குச்சாவடி எண் 221 ,225 பூத்தில் அதிமுக சார்பில் அதிமுக சின்னம் பொறித்த டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது.
டோக்கனுக்கு 500 ரூபாய் வழங்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போலீசாருக்கு புகார் செய்தனர் .
போலீசார் நடவடிக்கை எடுக்காததால் வேட்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுத்தாயி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார் இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் சண்முகம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி நிறுத்தப்பட்டால் தேர்தல் வரும்வரை இடத்தை விட்டு நகர மாட்டோம் என கூறியதால் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. காவல்துறையின் சமாதானப் பேச்சு ஏற்று கலைந்து சென்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி