இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே இதய நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. முதியவர்களுக்கு மாரடைப்பு வந்த காலம் போய், இளைஞர்களும் மாரடைப்பினால் இறக்கும் சமப்வங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், நம் அன்றாட பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டு, பொரித்த உணவுகளை தவிர்ப்பதோடு, ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பது மிகவும் புத்திசாலித்தனம்.
இதயத்திற்கு இதமான மஞ்சள் உணவுகள் : இதயம் நம் உடலின் மிக முக்கியமான பகுதியாகும். என்பது சொல்லொத் தெரிவதல்ல. இதய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவில்லை என்றால், மாரடைப்பு , கரோனரி தமனி நோய், போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், நம் அன்றாட உணவில் இருந்து எண்ணெய் உணவுகளை விலக்கி வைத்து, ஆரோக்கியமானவற்றை மட்டுமே சாப்பிடுவது முக்கியம். கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மிகவும் பிரபலமான உணவியல் நிபுணரான டாக்டர் ஆயுஷி யாதவ் இது குறித்து கூறுகையில், சில மஞ்சள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்கிறார்.
மாரடைப்பு தடுக்கும், மஞ்சள் நிற உணவுகள்:-
மாம்பழம் : மாம்பழத்தின் பெயரைக் கேட்டாலே வாயில் உமிழ் நீர் சுரக்கும். மாம்பழத்தை சுவைக்க, கோடைக் காலத்திற்காக் காத்திருக்கிறோம். இனிப்பான, சுவையான இந்தப் பழத்தை ருசித்தால், இதய ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதை அறிந்து கொண்டால், உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
எலுமிச்சை : எலுமிச்சை மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு. சாலட் முதல் எலுமிச்சைப் பழம் உணவுகளில் பல வகைகளில், பயன்படுத்தப்படுகிறது, இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
வாழைப்பழம் : வாழைப்பழம் மிகவும் எளிமையான, விலை குறைந்த பழம். ஆனால், இதில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய நலன்களோ விலை மதிப்பில்லாதவை. எனவே தினமும் இந்த பழம் உங்கள் உணவில் இருக்கட்டும். வாழைப்பழங்களை சாப்பிடுவது எடையைக் குறைக்க உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்
அன்னாசி : அன்னாசிப்பழம் அவ்வளவு இனிப்பாக இல்லாமல் சிறிது புளிப்பாக இருப்பதால், சிலருக்கு அது பிடிப்பதில்லை. ஆனால் இதை சாப்பிட்டால் மாரடைப்பு அபாயம் பெருமளவு குறைகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இருப்பினும், இதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதனால், இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.
பெல் பெப்பர் : பெல் பெப்பர் எனப்படும் மஞ்சள் நிறை குடைமிளகாயில், ஏராளமான நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் உள்ளது. இதனால் உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்கிறது. உடலில் இரத்தம் பற்றாக்குறை ஏற்படாது. இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.