சென்னை : சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் தைச் சேர்ந்த ஆயுதப்படை பெண் காவலர் சத்தியலட்சுமி வயது 29. சிலம்பாட்டம் பயிற்சியில் பதக்கம் பெற்ற பெண் காவலர். இவர் பரங்கிமலை ஆயுதப்படையில் காவலராகப் பணி செய்கிறார். இவரின் கணவர் கண்ணன் நெடுங்குன்றம் அதிலுள்ள என் எஸ் ஜி என்னும் தேசிய பாதுகாப்பு படையில் கமாண்டோவாக பணிபுரிகிறார். இவர்களுக்கு தன்சிகா என்னும் ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் சத்தியலட்சுமி வெள்ளிக்கிழமை முதல் தொடர்ச்சியாக மூன்று ஷிப்ட் பணி செய்துள்ளார். நேற்று, வீட்டில் இருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். குரோம்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு, வரும் வழியிலே உயிரிழந்து உள்ளதாக மருத்துவர்கள் கூறினர். மேலும் இது குறித்து பீர்க்கங்கணை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.
உயிரிழந்த பெண் காவலர் சத்திய லட்சுமிக்கும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சாஹித் உசேன்
மாநில தலைவர்
இளம் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா