சென்னை : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள வடுவூர் புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (33) இவர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள குமாரராஜா சாலையில் தங்கியிருக்கிறார். இங்கிருந்து, மயிலாப்பூர் போக்குவரத்து பிரிவில் கடந்த 2018ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். நேற்று வழக்கம்போல எஸ்சிபி ரோடு, சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது, மாலை 3.15 மணி அளவில் திடீரென மாரடைப்பு மயங்கி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்த காவலர்கள் போலீஸ் வாகனம் மூலம் அரசு ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்த விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மயிலாப்பூரில் பணியின்போது உயிரிழந்த காவலர் அருண்காந்த் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும். ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.