திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள நாட்டுகண்டானூரை சேர்ந்தவர் பாலன்(46), இவர் பட்டாசு மற்றும் ஹார்டுவேர் கடை வைத்து நடத்தி வருகின்றார். அவருடைய மகன் சூர்யபிரகாஷ் (14). இவன், திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவன், தனது தந்தை ஸ்கூட்டருடன் மாயமானான். இதுகுறித்து வடமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சூரியபிரகாஷ் தேடி வந்தனர். இந்தநிலையில் தாடிக்கொம்பு பகுதியில் ஸ்கூட்டரில் சுற்றித்திரிந்த சூரிய பிரகாஷை காவல்துறையினர் மீட்டனர்.
அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது: சூரியபிரகாஷ் தனது தாயின் செல்போனை வைத்து ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடி வந்துள்ளான்.
வீடியோ கேம் விளையாடுவதற்காக அவ்வப்போது, தனது தாயாரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.25 ஆயிரத்தை செலுத்தியுள்ளன்.
இது ,தனது பெற்றோருக்கு தெரிந்தால் தன்னை கண்டிப்பார்கள் என்று ஸ்கூட்டர் உடன் சிறுவன் மாயமாகி இருப்பது தெரியவந்தது ,என்றார். இதற்கிடையே மீட்கப்பட்ட சூரிய பிரகாஷ் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா















