திருவள்ளூர்: மாம்பழம் வாகனத்தில் மறைத்து வைத்து மது பாட்டில் கடத்தப் படுவதாக பொன்னேரி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திரு. கீதா லட்சுமிக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் கீதாலட்சுமி தலைமையில், உதவி ஆய்வாளர் குமார், வினை குமார் உள்ளிட்ட காவலர்கள் மீஞ்சூர் ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மாம்பழம் ஏற்றி வந்த சிறிய சரக்கு வாகனத்தை சோதனையிட்ட போது மாம்பழத்திற்கு கீழ் மறைத்து 2 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட 20 அட்டைப்பெட்டி சரக்கு உள்ள 960 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட சென்னை அம்பத்தூரை சேர்ந்த முருகன், ஐசக், நாகராஜ் ஆகியோரை கைது செய்து சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து பொன்னேரி மதுவிலக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்