மாமல்லபுரம்: தமிழக காவல் துறை டிஜிபியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சைலேந்திரபாபு -வை தமிழக அரசு நியமனம் செய்தது. டி.ஜி.பி – யாக பொறுப்பேற்றது முதல் திரு.சைலேந்திரபாபு காவல்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறார்.
மேலும் ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னைக்கு அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு சென்று காவல் பணிகள் குறித்து ஆய்வு மேற்க்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாமல்லபுரம் காவல் நிலையத்திற்கு சைக்கிளில் சென்று ஆய்வு மேற்க்கொண்டார்.
பின்னர் கடந்த ஜனவரி மாதம் விபத்தில் சிக்கி உயிரிழந்த தலைமை காவலர் திரு.தணிகைவேல் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தனிகைவேல் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதில் மாமல்லபுரம் துணை காவல் கண்கானிப்பாளர் ஜெகதீஸ்வரன் உட்பட பலர் உடன் வந்திருந்தனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஏழுமலை











