திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் அறிவுறுத்தலின் படி, திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் (20.02.2024) மன்னார்குடி ARJ-பொறியியல் கல்லூரியில் ஏற்பாடு செய்த மாபெரும் சைபர் குற்ற கருத்தரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கலந்து கொண்டு சைபர் குற்றங்கள் குறித்து மாணவ, மாணவியர்கள் மத்தியில் சிறப்புரையாற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.ஈஸ்வரன் அவர்கள், மன்னார்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.A.அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் மற்றும் திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ஸ்ரீபிரியா மற்றும் சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கணபதி ஆகியோரும் சைபர் குற்றங்கள் குறித்து எடுத்துரைத்தார்கள்.
கருத்தரங்கில் – Work From Home என்ற பெயரில் முன்பணம் பெற்று கொண்டு மோசடி செய்வது, பென்சில் மற்றும் மெழுகுவர்த்தி packing என்ற பெயரில் முன்பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்வது, Online Loan App, Fake Link, Fake Website, Online Marketing place fake link, OTP fraud, Online Identify Theft, அடையாளம் தெரியாத நபரை சமூக வலைதளங்களில் நண்பர்கள் ஆக ஏற்க கூடாது என்பது பற்றியும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும் சைபர் கிரைம் போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டதாக அறிந்தால் உடனடியாக 1930 என்ற உதவி எண் மற்றும் www.cybercrime.gov.in -ல் புகார் அளிக்குமாறு கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கருத்தரங்கின் முடிவில் ARJ பொறியியல் கல்லூரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மரக்கன்று நட்டு வைத்தார்கள். இக்கருத்தரங்கில் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர், ARJ பொறியியல் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.