பெரம்பலூர்: வனக் காப்பாளர்கள் பொன்னுசாமி, அன்பரசு, ராஜு ஆகியோர் கொண்ட குழுவினர் 36. எறையூர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சட்டவிரோதமாக மான் பிடித்து வெட்டி கறியாக இரண்டு பேர் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
அந்த இரண்டு பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை ஈடுபட்ட போது எறையூரை சேர்ந்த முத்துசாமி மகன் மணிகண்டன் 38, பரமசிவம் மகன் மாவீரன் 33 என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடமிருந்த மான் கறியை பறிமுதல் செய்த வனத்துறையினர் அந்த இருவருக்கும் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர்.இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.