சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன் என்பவர் கடந்த 26.05.2019 அன்று கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய தங்கமணி என்பவர் மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த அவரை 18.09.2019 அன்று சில அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கொலை செய்ய விரட்டிய போது அருகில் உள்ள தனியார் வங்கியில் நுழைந்த அவரை சரமாரியாக வெட்டினார்கள். இதை கண்ட வங்கி காவலாளி செல்ல நேரும் தன்வசம் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு கொலையாளிகளை விரட்டினார்.மேலும் துப்பாக்கி குண்டு பாய்ந்த ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து DSP கார்த்திகேயன் அவர்கள் தனிப்படை அமைத்து 21.09.2019 அன்று எதிரிகளான ஊமைத்துரை, பூமிநாதன், முருகேசன், தங்கராஜ், மச்சக்காளை, முத்துச்செல்வம், மச்சம்ஆகிய 7 பேர் மீது u/s 147,148,341,294(b)324,506(ii) IPC-ன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.